search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வெளியீட்டிற்கு முன் அமேசானில் பட்டியலிடப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்
    X

    வெளியீட்டிற்கு முன் அமேசானில் பட்டியலிடப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் விவோ வி9 ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டது.
    புதுடெல்லி:

    விவோ வி9 ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 23-ம் தேதி அறிமுகமாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. 

    ஆன்லைனில் விவோ வி9 ஸ்மார்ட்போன் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை, எனினும் ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் மார்ச் 23-ம் தேதி மதியம் 3.00 மணிக்கு துவங்க இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த விவரங்களும் வெளியாகி உள்ளது.

    விவோ வி9 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் விவோ வி9 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 



    அமேசானில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ வி9 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் AMOLED பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ வி9 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இதே மாதத்தில் இந்தோனேஷிய வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டது. இந்தோனேஷிய வலைத்தளத்தில் வி9 விலை IDR4,999,000 (இந்திய மதிப்பில் ரூ.23,700) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி + 8 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0 மற்றும் 3250 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×