search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எதிர்பார்த்ததை விட மும்மடங்கு விலைக்கு ஏலம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம்
    X

    எதிர்பார்த்ததை விட மும்மடங்கு விலைக்கு ஏலம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் 'ரெஸ்யூம்'

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் எதிர்பார்த்ததை விட மும்மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
    மசாசூட்ஸ்:

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நான்கு தசாப்தங்களுக்கு முன் பூர்த்தி செய்த வேலையில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் 1,74,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,13,23,050) விற்கப்பட்டிருக்கிறது. இது ஏலத்திற்கு முன் கணிக்கப்பட்டதை விட மும்மடங்கு அதிகம் ஆகும்.

    அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் இயங்கி வரும் ஆர்.ஆர். ஆக்ஷன் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இண்டர்நெட் தொழிலதிபர் ஸடீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ரெஸ்யூமை வாங்கியுள்ளார். வாங்கியர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் துவங்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒற்றை பக்க விண்ணப்ப படிவத்தில் ஸ்டீவ் எழுத்து பிழைகளுடன் தானே பூர்த்தி செய்திருக்கிறார். இத்துடன் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் தன் ஆர்வத்தை ரெஸ்யூமில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

    புகைப்படம்: நன்றி RR Auction

    ஸ்டீவ் பூர்த்தி செய்த விண்ணப்பம் எந்த பணியில் சேர்வதற்கானது மற்றும் அவருக்கு அந்த வேலை உண்மையில் வழங்கப்பட்டதா என்ற விவரங்கள் தெரியவில்லை, தொலைப்பேசி வைத்திருப்பது குறித்த கேள்விக்கு இல்லை என குறிப்பிட்டிருந்தார். 

    எலெக்ட்ராணிக்ஸ் டெக் அல்லது டிசைன் இன்ஜினியர் மற்றும் கம்ப்யூட்டர் புரியும் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இத்துடன் ஸ்டீவ் ஜாப்ஸ் என தன் பெயரையும், முகவரியில் ரீட் கல்லூரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பதாகவும், கார் வைத்திருப்பது குறித்த கேள்விக்கு 'சாத்தியம் ஆனால் சாத்தியமற்றது,' என பதில் அளித்திருக்கிறார்.

    ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட 2008-ம் ஆண்டின் ஐபோன் சார்ந்த செய்தி குறிப்பு, ரோலண்ட் வெய்ண் கையெழுத்திட்ட ஆப்பிள் லோகோ உள்ளிட்டவை ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமின்றி பல்வேறு இதர நினைவு பொருட்களும் ஆர்.ஆர். ஆக்ஷன் நிறுவன ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டது.

    புகைப்படம்: நன்றி RR Auction

    2011-ம் ஆண்டு புற்று நோய் மூலம் பாதிக்கப்பட்டு ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்தார். ஸ்டீவ் பூர்த்தி செய்த விண்ணப்பம் இன்றும் இத்தகைய தொகைக்கு விற்பனையாகியுள்ளது அவரின் பெருமைக்கான எடுத்துக்காட்டு என ஆர்.ஆர். ஆக்ஷன் தெரிவித்திருக்கிறது.

    ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ஆப்பிள் மேக் ஓ.எஸ். X பயன்பாட்டு ஏடு 41,806 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.27,20,525), ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்டிருந்த செய்தி குறிப்பு 26,950 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,53,771)
    விற்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×