search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: சியோமி லோகோ
    X
    கோப்பு படம்: சியோமி லோகோ

    அதிரடியாய் தயாராகும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் எனும் புதிய ஸ்மார்ட்போனினை தயாரித்து வருவது பென்ச்மார்க்கிங் வலைத்தளம் மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்போன சியோமி பிளாக்ஷார்க் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அன்டுடு (AnTuTu) பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய சியோமி ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர்களில் 2452 புள்ளிகளும் மல்டிகோர்களில் 8452 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

    கீக்பென்ச் ஆப் 4.2.2 செயலியில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 1080x2160 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    இதேபோன்று இந்த ஸ்மார்ட்போன் அன்டுடு பென்ச்மார்க்கில்ல 270,680 புள்ளிகளை பெற்றிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக பிளாக் ஷார்க் என்ற பெயரில் மொபைல் கேமிங் நிறுவனத்தை சியோமி துவங்கிய நிலையில், புதிய ஸ்மார்ட்போன் தயாராவது குறித்த தகவல்கள் நம்பும் படியாக உள்ளது. 

    பிளாக் ஷார்க் வலைத்தளத்தில் சியோமி முக்கிய முதலீட்டாளர் என்பது தெரியவந்துள்ளது. எனினும் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் விரிவாக அறியப்படாத நிலையில், உயர்-ரக கேமிங் அம்சங்களுக்கான ஹார்டுவேர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய சியோமி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும், இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அந்த வகையில் மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் சியோமி வழங்க இருக்கும் சிப்செட் குறித்த தகவல்கள் தெரியவரும்.
    Next Story
    ×