search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் வாங்குவோருக்கு 70 சதவிகிதம் சலுகை
    X

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் வாங்குவோருக்கு 70 சதவிகிதம் சலுகை

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் மையங்களில் வாங்குவோருக்கு 70% வரை பைபேக் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டு, நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 பிளஸ் 256 ஜிபி ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் சாம்சங் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் 12 மாதங்களில் குறைந்தபட்சம் ரூ.2500க்கு ரீசார்ஜ் செய்யும் போது, ஸ்மார்ட்போனினை திரும்ப வழங்கும் போது 70% வரை பைபேக் தொகையை பெற முடியும்.



    ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் வாங்கும் சார்பில் ரூ.6000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 மாதங்களுக்கான மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் போதே கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை ஒரு ஆண்டிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.15,000 மதிப்புடைய சலுகைகளை ரூ.4,999க்கு வழங்குவதோடு ஜியோ பிரைம் சந்தாவும் வழங்கப்படுகிறது.



    கேலக்ஸி எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    -  6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
    - அட்ரினோ 630, மாலி G72M18GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
    - 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளூ மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கின்றது.
    Next Story
    ×