search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ஐபோன் எஸ்.இ.
    X
    கோப்பு படம்: ஐபோன் எஸ்.இ.

    விரைவில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ. 2

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 வெளியாவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், இதனை உறுதி செய்யும் வகையில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) புதிய ஐபேட்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய ஐபோன் வெளியாகலாம் என்ற வாக்கில் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. 

    புதிய வீடியோவில் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஐபோன் X போன்ற நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் கேமரா செட்டப், எட்ஜ்-டூ-எட்ஜ் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஐபோன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோவில் உள்ள ஐபோன் போலியானது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஐபோன் எஸ்.இ. 2 தயாராவது குறித்து முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பிரபல ஐபோன் வல்லுநரான மிங்-சி-கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஐபோன் எஸ்.இ.2 இந்த ஆண்டு வெளியாகாமல், மூன்று ஐபோன் மாடல்கள் வெளியிடப்படலாம் என தெரிவித்திருக்கிறார். இத்துடன் அடுத்த தலைமுறை ஐபோன் X மாடல் இந்த ஆண்டு வெளியாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான தகவல்களின் படி 2018 புதிய ஐபோன் மாடல்களின் தயாரிப்பு பணிகள் மே அல்லது ஜூன் மாத வாக்கில் துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மார்ச் 2016-இல் வெளியான ஐபோன் எஸ்.இ. இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    யூடியூபில் வெளியாகி இருக்கும் ஐபோன் எஸ்.இ. 2 வீடியோவை கீழே காணலாம்..,


    Next Story
    ×