search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: சியோமி லோகோ
    X
    கோப்பு படம்: சியோமி லோகோ

    சியோமி ஸ்மார்ட்போன்களை வாங்க எளிய வழிமுறை ஆன்லைனில அறிமுகம்

    சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் சலுகையில் வாங்க நவம்பர் 2017-இல் டிரேட்-இன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், இந்த சேவை ஆன்லைனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனம் 2017 நவம்பர் மாதத்தில் டிரேட் இன் எனும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கேஷிஃபை மற்றும் Mi எக்சேஞ்ச் திட்டங்களுடன் இணைந்து Mi ஹோம் ஸ்டோர்களில் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

    ஆஃப்லைன் விற்பனையில் எக்சேஞ்ச் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய Mi வலைத்தளத்தில் பிரத்யேக பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் ஐ.எம்.இ.ஐ. குறியீட்டை பதிவிட்டு தொகையை Mi கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

    வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சியோமி வழங்கும் தொகை ஏற்புடையதாக இருப்பின் வாடிக்கையாளர்கள் தங்களது ஐ.எம்.இ.ஐ. (IMEI) நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்ததும் எக்சேஞ்ச் தொகை Mi கணக்கில் சேர்க்கப்படும்.



    சியோமி வழங்கும் கூப்பன் கொண்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கிட முடியும். இதற்கு புதிய ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்யும் போது எக்சேஞ்ச் குறியீடை பதிவிட வேண்டும். இறுதியில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் போது பழைய ஸ்மார்ட்போனினை வழங்க வேண்டும்.

    பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய அவை ஒழுங்காக வேலை செய்வதுடன், எவ்வித சேதாரமும் இருக்கக் கூடாது. இத்துடன் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து ஸ்கிரீன் லாக் மற்றும் கணக்குகளையும் டிசேபிள் செய்ய வேண்டும். மேலும் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய அவை சியோமி பட்டியலில் இருப்பதோடு, வாடிக்கையாளர் ஒரு ஸ்மார்ட்போனினை மட்டுமே எக்சேஞ்ச் செய்ய முடியும்.

    சியோமி வழங்கும் எக்சேஞ்ச் கூப்பன் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இந்த எக்சேஞ்ச் சலுகை ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் இதை கொண்டு எவ்வித அக்சஸரிகளையும் வாங்க முடியாது.
    Next Story
    ×