search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ஐபோன் போர்ட்
    X
    கோப்பு படம்: ஐபோன் போர்ட்

    ஐபோன்களில் புதிய சார்ஜிங் போர்ட்

    ஆப்பிள் நிறுவன எதிர்கால ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதுவித சார்ஜிங் போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    தொழில்நுட்ப துறையில் புதுவித தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதோடு அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் ஆப்பிள் பெயர்பெற்ற நிறுவனமாக இருக்கிறது. 

    மல்டி-பின் போர்ட் முதல் ஹெட்ஹோன் ஜாக், கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை நீக்கி புதிய அம்சங்களை அறிமுகம் செய்த பெருமை ஆப்பிள் பெற்றிருக்கிறது. அந்த வகையில் எதிர்கால ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதுவித சார்ஜிங் போர்ட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் லைட்னிங் போர்ட் நீக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    அமெரிக்க காப்புரிமை வழங்கும் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் புதுவித சார்ஜிங் போர்ட் வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்சமயம் வழங்கப்படும் லைட்னிங் போர்ட்களில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்கள் தண்ணீர் மூலம் பாதிக்கப்படாமல் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.



    புதிய கனெக்டர் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் செய்யும் படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வடிவமைப்பு யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டர்களிலும் ஆப்பிள் லேப்டாப் போர்ட்களிலும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் காப்புரிமை தான் என்பதால் இது ஆப்பிள் சாதனங்களில் இடம்பெற சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    2016-ம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 முதல் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. புதிய காப்புரிமைகளில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எதிர்கால ஆப்பிள் சாதனங்களை அதிகளவு தூசு இருக்கும் பகுதிகளிலும் தயக்கமின்றி சார்ஜ் செய்ய முடியும். இதுதவிர தற்போதைய ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×