search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ட்விட்டர்
    X
    கோப்பு படம்: ட்விட்டர்

    ட்விட்டரில் அனைவருக்கும் வெரிஃபைடு அக்கவுண்ட்

    ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் வெரிஃபைடு சேவையை வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    ட்விட்டர் தளத்தில் அனைவருக்கும் வெரிஃபைடு சேவையை வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். எனினும் இதற்கான வழிமுறையை தெரிவிக்கவில்லை.

    சமீபத்தில் சில ட்விட்டர் கணக்குகளை வெரிஃபை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ட்விட்டர் வெரிஃபை விண்ணப்பங்கள் ஏற்பதை நிறுத்தி விட்டது. சமீபத்திய அறிவிப்பின் படி விரைவில் இந்த சேவையை மீண்டும் வழங்க ட்விட்டர் முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    2016-ம் ஆண்டு விண்ணப்பித்த அனைவரின் கோரிக்கைகளையும் ட்விட்டர் உறுதி செய்து, வாடிக்கையாளர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டறிந்தது. பிரபல எழுத்தாளர்கள், கிரியேட்டர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்துவோர் தவிர மற்ற கோரிக்கைகளை நிராகரித்து வந்தது.



    ட்விட்டரில் வெரிஃபைடு சேவை வாடிக்கையாளர்களுக்கு அடையாளத்தை வழங்க பயன்படுத்தப்படுகிறது. துவக்கத்தில் பிரபலங்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டது. ட்விட்டரில் வாடிக்கையாளர்களுக்கு வெரிஃபைடு சேவை வழங்க புதிய வழிமுறைகளை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

    முன்னதாக ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை பின்னர் படிப்பதற்கு ஏதுவாக அவற்றை சேமித்து வைக்க புதிய வசதியை அறிமுகம் செய்தது. புக்மார்க்ஸ் (Bookmarks) என அழைக்கப்படும் புதிய அம்சம் சேமித்து வைக்கப்படும் ட்விட்களை வாடிக்கையாளர்கள் பின்னர் இயக்க வழி செய்கிறது.

    இதேபோன்று ட்விட்களை மிக எளிமையாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள 'ஷேர்' எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. ட்விட்டர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஷேர் ஐகானை கிளிக் செய்து ட்விட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவோ, அவற்றை புக்மார்க் செய்யவோ முடியும்.
    Next Story
    ×