search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ஏர்செல்
    X
    கோப்பு படம்: ஏர்செல்

    திவால் ஆகிறது ஏர்செல் நிறுவனம்- மனுவை ஏற்றது கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்

    கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரிய மனுவினை ஏற்றுக் கொள்வதாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் (என்.சி.எல்.டி.) ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரிய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை ஏர்செல் நிறுவனர், இயக்குனர் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் முறையான அனுமதியின்றி நிறுவனத்தை விட்டு வெளியேறக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்செல் நிறுவனத்தின் தீர்வுக்காக புதிய தலைவராக (ஐஆர்பி) டிலொய்ட் இந்தியா நிறுவன மூத்த தலைவர் விஜய் ஐயர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய தலைவரின் கீழ் அந்நிறுவனத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட இருக்கிறது.



    முன்னதாக சுமார் 15,000 கோடி அளவு கடன், மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு சுமார் 35,000 கோடி வரை கடன் சுமையில் சிக்கியதை தொடர்ந்து தனது நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

    ஏர்செல் திவால் ஆன நிறுவனமாக அறிவிக்கப்படும் நிலையில், ஏர்செல் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து மற்றும் பங்குகளை கையகப்படுத்தி விற்றோ, அல்லது ஏலத்தில் விட்டோ,  ஓரளவுக்கு கடனை அடைக்கலாம் என தெரிகிறது.
     
    முன்னதாக, ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறிய (போர்ட் அவுட் செய்த) பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ் தொகை குறித்து ஏர்செல் விளக்கம் அளிக்க மத்திய டெலிகாம் துறை கேட்டு கொண்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாக தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவை முடங்கியுள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனம் விரைவில் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஏர்செல் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×