search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: சாம்சங்
    X
    கோப்பு படம்: சாம்சங்

    இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் புது வியூகம்

    இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் புதிய வியூகம் அமைத்திருப்பதாகவும், வரும் மாதங்களில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இதையொட்டி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:
     
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி நிலை காரணமாக சாம்சங் இந்தியா பல்வேறு விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது என அந்நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சாம்சங் இந்தியா நிறுவன சர்வதேச துணை தலைவர் அசிம் வார்சி அளித்திருக்கும் சமீபத்திய தகவல்களில், போட்டியை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக தெரிவித்துள்ளார். 

    சாம்சங்கின் புதிய திட்டங்கள் குறிப்பாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களை எதிர்கொள்ள ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு முழுக்க பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது.



    புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தளங்களில் விற்பனைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். நேற்று (மார்ச் 6-ம் தேதி) இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது. மேக் ஃபார் இந்தியா அம்சமான எல்டிஇ அக்ரீகேஷன் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் 2.5 மடங்கு வேகத்தில் டேட்டாவை ஸ்ட்ரீம் செய்ய முடியும். இத்துடன் சாம்சங் ரிவார்ட்ஸ் எனும் புதிய திட்டத்தையும் சாம்சங் அறிமுகம் செய்தது.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பிரீமியம் பிரிவில் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ( முறையே ரூ.57,900 மற்றும் ரூ.64,900) முன்னணி இடத்தை தக்க வைக்கும் என எதிர்பார்ப்பதாக வார்சி தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியாவில் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் அபாரமானது. இதே போன்ற வரவேற்பு கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் மாடல்களுக்கும் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.



    புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வரயிருக்கிறது. எல்டிஇ அக்ரிகேஷன் சேவையை வழங்க சாம்சங் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக டேட்டா, அதிக பேண்ட்வித் மற்றும் டவுன்லோடு உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

    சர்வதேச டேட்டா கார்பரேஷன் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களின் படி 2017-ம் ஆண்டில் 24.7 சதவிகித பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடம் பிடித்திருந்தது. 

    ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் என வாடிக்கையாளர்கள் விரும்பும் தளங்களில் எங்களது சாதனங்களை கொண்டு சேர்க்க தொடர்ந்து முதலீடு செய்வோம். விற்பனை மட்டுமின்றி சர்வீஸ் மையங்களிலும் அதிக கவனம் செலுத்துவோம் என வார்சி தெரிவித்துள்ளார். 
    தற்சமயம் வரை இந்தியா முழுக்க 1,50,000 டச் பாயிண்ட்கள் என சாம்சங் மிகப்பெரிய விற்பனை மையத்தை கொண்டுள்ளது.
    Next Story
    ×