search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் வெளியானது
    X

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் வெளியானது

    சாம்சங் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. முன்னதாக பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5  வேரிபிள் அப்ரேச்சர் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.4-f/1.5 வேரிபிள் அப்ரேச்சர் மற்றும் போக்கெ எஃபெக்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சோனி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் 960fps சூப்பர் ஸ்லோ-மோ வீடியோ ஆப்ஷன் கொண்டுள்ளது. இத்துடன் ஆட்டோமேடிக் மோஷன் டிடெக்ஷன் மற்றும் நகரும் ஃபிரேம்களை கண்டறிந்து தானாக பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கிறது. 



    புதிய ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஸ்லோ-மோ வீடியோ பதிவு செய்ததும், வீடியோ பின்னணியில் இசையை சேர்க்க 35 வெவ்வேறு ஆப்ஷன்களும், வாடிக்கையாளர்கள் விரும்பும் இசையை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எண்ட்-டூ-எண்ட் பெசல் லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் குவால் ஹெச்.டி. பிளஸ் ஸிகீரன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் AKG ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுண்ட் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை வெளியான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விட சத்தமான ஸ்பீக்கர்கள் புதிய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் X அனிமோஜி போன்றே AR எமோஜி ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 

    மிலிட்டரி கிரேடு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் சாம்சங் நாக்ஸ் (knox) எனும் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி எஸ் 9 சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
    - அட்ரினோ 630, மாலி GPU G72M18GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி



    சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    -  6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட்
    - அட்ரினோ 630, மாலி G72M18GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர்
    - 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 aperture
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி
     
    சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போனினை பேடிஎம் மால் மூலம் வாங்குவோருக்கு ரூ.6,000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி மூலம் பணம் செலுத்தும் போதும் கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போதும் ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் 64 ஜிபி விலை ரூ.57,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்9 பிளஸ் 64 ஜிபி விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் விலை ரூ.65,900 என்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் 256 ஜிபி மாடல் ரூ.72,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளூ மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கின்றது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 16-ம் தேதி துவங்குகிறது.
    Next Story
    ×