search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு ஏர்செல் முக்கிய நகர்வு
    X

    வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு ஏர்செல் முக்கிய நகர்வு

    ஏர்செல் நிறுவனம் எதிர்கொண்டு வரும் கடுமையான காலங்களில் தனது வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு முக்கிய நகர்வுகளை எடுத்து வருகிறது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் புதுவரவு நிறுவனங்களின் வரவு மற்றும் பல்வேறு காரனங்களால் கடுமையான நிதிச்சுமையை ஏர்செல் சந்தித்து, தனது நிறுவனம் திவாலானதாக அறிவிக்க ஏர்செல் நிறுவனம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ளது. 

    ஏர்செல் சேவைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கும் நோக்கில் இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் பேக்ட் வழங்க ஏர்செல் நிறுவனம் பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஏர்செல் சேவையை தொடர்ந்து வழங்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் ஏர்செல் சேவை தொடர்ந்து பாதிக்கப்படும் பட்சத்தில் அதன் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அதிகளவு சுமையை அந்நிறுவனம் கூடுதலாக சந்திக்க நேரிடும்.

    இது ஏற்கனவே கணக்கிடப்பட்டு இருக்கும் இழப்பு தொகையை (சுமார் ரூ.15,000 கோடி) மேலும் அதிகரிக்க செய்யும். முன்னதாக ஏர்செல் திவாலானதாக அறிவிக்க கோரிய மனு ஏற்கப்பட்டால், அந்நிறுவன இழப்புகளை ஈடு செய்து, சேவையை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க முடியும்.



    திவாலானதாக அறிவிக்க கோரிய மனுவில் ஏர்செல் தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரை சீரான சேவையை வழங்க தொடர்ந்து முயற்சிக்கும் என தெரிவித்து, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டிருந்தது. 

    தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மும்பை, வட கிழக்கு, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது.

    சில பகுதிகளில் ஏர்செல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற போர்ட் அவுட் கோடு பெற முடியவில்லை. 

    மலேசியாவின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஏர்செல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது, எனினும் இது அந்நிறுவனத்திற்கு சாதகமாய் அமையவில்லை. இதைத் தொடர்ந்து ஏர்செல் ரூ.15,500 கோடி வரையிலான நஷ்டத்தை சந்தித்தது.



    நிறுவனத்தை மீட்க ஏர்செல் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்காத நிலையில் அந்நிறுவனம், திவாலானதாக அறிவிக்க கோரும் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    கடுமையான காலத்தை கடக்க ஏர்செல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போதைய பேச்சுவார்த்தை ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக அமையும் பட்சத்தில், வாடிக்கையாளர்கள் மூலம் வரும் வருவாயை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    இண்டர்-கணெக்ட் கட்டணங்களை செலுத்தாத காரணத்தால் ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நெட்வொர்க்களுக்கு வரும் ஏர்செல் அழைப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏர்செல் சொத்துக்களில் ஈர்க்கப்படும் பட்சத்தில் பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ அந்நிறுவனத்திற்கு சாதகமான முடிவை எடுக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×