search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆஃப்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரெட்மி நோட் 5
    X

    ஆஃப்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரெட்மி நோட் 5

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் முறையில் முன்பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இரண்டு முறை விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 5 சீரிஸ் விற்று தீர்ந்த நிலையில், ஆஃப்லைன் முறையில் முன்பதிவு துவங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்வோருக்கு ரெட்மி நோட் 5 மார்ச் 8-ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி நோட் 5 போன்றே ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போன்களை ஆஃப்லைனில் வாங்குவோர் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் ரெட்மி நோட் 5 விலை ரூ.9,999 மற்றும் ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஃப்லைனில் வாடிக்கையாளர்கள் 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 5 வாங்க ரூ.10,499 மற்றும் 4ஜிபி ரேம் மாடல் வாங்க ரூ.12,499 வரை செலுத்த வேண்டும். 



    இதேபோன்று ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்குவோரும் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. ஆன்லைனில் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 5 ப்ரோ ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 5 ப்ரோ ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 5 MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது. இத்துடன் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், அட்ரினோ 506 GPU, கைரேகை சென்சார், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது. இத்துடன் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், அட்ரினோ 509 GPU, கைரேகை சென்சார், 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
    Next Story
    ×