search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் X அம்சம் பெற்ற ரெட்மி நோட் 5 ப்ரோ
    X

    ஐபோன் X அம்சம் பெற்ற ரெட்மி நோட் 5 ப்ரோ

    ஆப்பிள் ஐபோன் X பெற்றிருக்கும் முக்கிய சிறப்பம்சம் சியோமியின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் காதலர் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் வெளியிடப்பட்டது.

    ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான MIUI V9.2.4.0 அப்டேட் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை வழங்கியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்விலேயே ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்திருந்த நிலையில், முதல் ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்றதும் வழங்கப்பட்டுள்ளது. 

    ஃபேஸ் அன்லாக் மட்டுமின்றி புதிய அப்டேட்டில் சிஸ்டம் ஸ்டேபிலிட்டி ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. 



    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
    - 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
    - கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

    இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சமீபத்தில் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனிலும் ஃபேஸ் அன்லாக் அம்சம் HOTA அப்டேட் மூலம் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும் இந்த அம்சம் மார்ச் 5-க்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×