search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நொடிகளில் விற்று தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன், Mi டி.வி. 4
    X

    நொடிகளில் விற்று தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன், Mi டி.வி. 4

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் Mi டி.வி. 4 விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் Mi டி.வி. 4 ஃபிளாஷ் முறையில் நேற்று விற்பனை செய்யப்பட்டது. சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளங்களில் விற்பனை நடைபெற்றது.

    சில சாதனங்கள் Mi ஹோம் ஸ்டோர் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் ஃபிளாஷ் விற்பனையில் மட்டும் சுமார் மூன்று லட்சம் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மதியம் 2.00 மணிக்கு Mi டிவி4 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டது. Mi டி.வி. 4 விற்பனை வெறும் பத்து நொடிகளில் விற்று தீர்ந்ததாக சியோமி அறிவித்துள்ளது.

    இந்தியாவில் காதலர் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 22-ம் தேதி முதல் ஃபிளாஷ் விற்பனை நடைபெற்றது. இதே விழாவில் Mi டி.வி. 4 அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 5, நோட் 5 ப்ரோ அடுத்த விற்பனை பிப்ரவரி 28-ம் தேதியும், Mi டி.வி. 4 அடுத்த ஃபிளாஷ் விற்பனை பிப்ரவரி 27-ம் தேதி மதியம் 02.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.



    நேற்றைய விற்பனையில் எத்தனை ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனையானது என்ற விவரத்தை சியோமி வெளியிடவில்லை. மேலும் Mi  டிவி விற்பனை எண்ணிக்கையும் சியோமி வழங்கவில்லை. 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 5 விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது. 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 5 விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் விலை ரூ.13,999 முதல் துவங்குகிறது. இதன் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சியோமி 55-இன்ச் 4K ரெசல்யூஷன் கொண்ட Mi டி.வி. 4 ஹெச்.டி.ஆர். மற்றும் டால்பி வசதி, வைபை மூலம் செயலிகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இந்தியாவில் Mi டி.வி. 4 விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×