search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் - டெலிகாம் துறை விளக்கம்
    X

    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் - டெலிகாம் துறை விளக்கம்

    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தப்பட இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்திய டெலிகாம் துறை விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், தற்சமயம் பயன்படுத்தப்படும் மொபைல் நம்பர்களும் 13 இலக்குகளாக மாற்றப்படும் என்ற வாக்கில் தகவல் வெளியானது. பின் இந்த தகவல் உண்மையில்லை என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மையில் 13 இலக்க எண்கள் அறிமுகம் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    உண்மையில் 13 இலக்க மொபைல் நம்பர்களுக்கான சிம் கார்டுகளை வழங்க டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். 13 இலக்க மொபைல் நம்பர் வழங்குவதற்கான பணிகளையும் ஏற்கனவே துவங்கி விட்டது. எனினும் இந்த விவகாரம் வழக்கமான மொபைல் நம்பர் பயன்படுத்துவோருக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் வழங்கப்படுவது தற்போதைய வாடிக்கையாளர்களை எவ்விதத்திலும் பாதிக்காது. புதிய 13 இலக்க மொபைல் நம்பர்கள் M2M (மெஷின்2மெஷின்) ரக சிம் கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. இவ்வகை சிம் கார்டுகள் ஆட்டோமேட்டெட் மெஷின்களில் பயன்படுத்தப்படுகின்றன. 



    இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 13 இலக்க M2M நம்பர்களை மட்டுமே வழங்க வேண்டும் என மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018க்குள் M2M மொபைல் நம்பர்களை 13 இலக்க எண்களாக மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பி.எஸ்.என்.எல். தனது ஹார்டுவேர் விநியோகஸ்தர்களான இசட்.டி.இ. மற்றும் நோக்கியாவிற்கு M2M சிம் கார்டுகளில் 13 இலக்க மொபைல் நம்பர் இருக்க வேண்டும் என்ற தகவலை அனுப்பி இருக்கிறது. மத்திய டெலிகாம் துறை வெளியிட்டிருக்கும் புதிய உத்தரவு சாதாரண சிம் கார்டு வைத்திருப்போரை எவ்விதத்திலும் பாதிக்காது, என டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×