search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    13 இலக்க மொபைல் நம்பர் - இனி ஞாபகம் இருக்குமா?
    X

    13 இலக்க மொபைல் நம்பர் - இனி ஞாபகம் இருக்குமா?

    இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜூலை 1, 2018 முதல் வழங்கப்படும் புதிய மொபைல் நம்பர்களில் 13 இலக்ககளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் 10 இலக்க மொபைல் நம்பர்களும் 13 இலக்ககளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய டெலிகாம் துறை சார்பில் இசட்.டி.இ. டெலிகாம் (ZTE Telecom) மற்றும் நோக்கியா சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்ஸ் (Nokia Solutions Networks) போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஐடி மற்றும் இது தொடர்பான அனைத்து சிஸ்டம்களிலும் 13 இலக்க மொபைல் நம்பர்கள் ஜூலை 1, 2018க்குள் மாற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது பயன்படுத்தப்படும் 10 இலக்க மொபைல் நம்பர்களை 13 இலக்ககளாக மாற்றம் செய்ய அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.



    சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதில் புதிய 10 இலக்க நம்பர்களை வழங்க முடிவு செய்து இறுதியில் 13 இலக்ககளுக்கு மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

    அந்த வகையில் இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் மாற்றம் செய்யப்படும் போது, நீண்ட இலக்ககள் கொண்ட மொபைல் நம்பர் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும். தற்சமயம் பகுதி குறியீடு சேர்க்காமல் 11 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தும் சீனா உலகின் நீண்ட மொபைல் நம்பர் கொண்ட நாடாக இருக்கிறது.
    Next Story
    ×