search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.151க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன்
    X

    ரூ.151க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன்

    வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை வழங்கும் இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    வோடபோன் சூப்பர் பிளான் பெயரில் ரூ.158க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ரூ.151க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இரண்டு சலுகைகளும் கேரளாவில் மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 



    புதிய ரூ.158 சலுகையானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.169 சலுகைக்கும் போட்டியாக அமைந்துள்ளது. 

    ஏர்டெல் ரூ.169 சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை ஏர்டெல் இணைந்திருக்கும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

    வோடபோன் அறிவித்திருக்கும் ரூ.151 சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.93 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஐடியா செல்லுலார் ரூ.109 சலுகையில் இதேபோன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×