search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தெலுங்கு வார்த்தை பிழைக்கு புதிய அப்டேட் வெளியிட்ட ஆப்பிள்
    X

    தெலுங்கு வார்த்தை பிழைக்கு புதிய அப்டேட் வெளியிட்ட ஆப்பிள்

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளத்தில் தெலுங்கு வார்த்தையால் ஏற்பட்ட பிழையை சரி செய்து புதிய மென்பொருள் அப்டேட்டை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் ஐபோன்களை கிராஷ் செய்த தெலுங்கு வார்த்தை பிழையை சரி செய்து ஆப்பிள் புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

    ஐ.ஓ.எஸ். 11.2.6 அப்டேட் ஐபோன்களை கிராஷ் செய்த தெலுங்கு வார்த்தையை மட்டும் சரி செய்துள்ளது. இதே அப்டேட் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் சில மூன்றாம் தரப்பு செயலிகள் எக்ஸ்டெர்னல் அக்சஸரீகளுடன் கணெக்ட் ஆகாமல் இருந்த பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.

    ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கு ஐ.ஓ.எஸ். அப்டேட் வழங்கப்பட்டிருப்பதோடு, ஆப்பிள் வாட்ச் (வாட்ச்ஓ.எஸ். 4.2.3), ஆப்பிள் டிவி (டிவிஓ.எஸ். 11.2.6), மேக்புக் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் (மேக் ஓ.எஸ். 10.13.3) சாதனங்களுக்கும் ஆப்பிள் புதிய மென்பொருள் அப்டேட்களை வெளியிட்டுள்ளது.



    புதிய ஐ.ஓ.எஸ். பிழை சில சாதனங்களை கிராஷ் செய்வதாக கூறப்பட்டாலும், சில சாதனங்களில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட தெலுங்கு வார்த்தை நோட்டிபிகேஷன் வடிவில் வந்தாலும், ஐ.ஓ.எஸ். ஸ்ப்ரிங்போர்டினை ரீசெட் செய்ய வைக்கிறது. ஐ.ஓ.எஸ்.-இல் நோட்டிபிகேஷன்களை ஸ்ப்ரிங்போர்டு தான் கண்ட்ரோல் செய்கிறது.

    சில சாதனங்களில் ஸ்ப்ரிங்போர்டு வெற்றிகரமாக ரீசெட் செய்யப்பட்டு தானாக ரீஸ்டார்ட் ஆவதாக கூறப்படுகிறது. சிலருக்கு ஐபோன்கள் தானாக பூட்லூப் வரை சென்று மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஐபோனினஎை டிவைஸ் ஃபர்ம்வேர் அப்டேட் மோட் மூலம் சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

    ஐபோனின் டிவைஸ் ஃபர்ம்வேர் அப்டேட் மோட் போனில் உள்ள தகவல்களை முழுமையாக அழித்து, இயங்குதளத்தை மீண்டும் ரீஸ்டோர் செய்யும். ஐபோன்களை பேக்கப் செய்யாதவர்களின் தகவல்களை மீண்டும் ரீஸ்டோர் செய்யாமல், முதலில் இருந்து ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
    Next Story
    ×