search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.109க்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா
    X

    ரூ.109க்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஐடியா செல்லுலார் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.109 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள டேட்டா போட்டிக்கு எண்ட் கார்டு இப்போதைக்கு கிடையாது போலிருக்கு. டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு புதிய சலுகைகள் மற்றும் கூடுதல் டேட்டா என வாடிக்கையாளர்களை கவரவும், தக்க வைத்து கொள்ளவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

    அந்த வகையில் ஐடியா செல்லுலார் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.109 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 14 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்லிமிட்டெட் அழைப்புகளின் கால அளவு நிறைவுற்றதும், ஒவ்வொரு அழைப்பிற்கு நொடிக்கு 1 பைசா விதிகம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவின் சில வட்டாரங்களில் மட்டும் கிடைக்கும் புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஐடியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மை ஐடியா செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும்.

    ஐடியாவின் புதிய சலுகை ஏர்டெல் ரூ.93 மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 சலுகைகளுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ரூ.93 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாற்றம் செய்திருந்தது. ஐடியாவின் ரூ.499, ரூ.649, ரூ.999, ரூ.389, ரூ.1299, ரூ.1699 மற்றும் ரூ.2999 சலுகைகளில் மாற்றம் செய்திருந்தது. மாற்றத்திற்கு பின் கூடுதல் டேட்டா மற்றும் ரோல்ஓவர் சலுகை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×