search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோவுக்கு போட்டியாக டொகோமோ அறிவித்த அதிரடி சலுகை
    X

    ஜியோவுக்கு போட்டியாக டொகோமோ அறிவித்த அதிரடி சலுகை

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், டாடா டொகோமோவும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக புதிய சலுகைகளை அறிவிப்பத்தில் அதிக ஆர்வம் செலுத்தாத நிறுவனமாக டாடா டொகோமோ இருந்தது. பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைவதை உறுதி செய்த நிலையில், டெலிகாம் சந்தையில் நிலவும் விலை போட்டியில் டொகோமோ பங்கேற்காது என்ற கருத்து இருந்து வந்தது.

    டெலிகாம் சந்தையில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஜியோவுக்கு போட்டியாக டாடா டொகோமோ புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.98 சலுகைக்கு போட்டியாக டாடா டொகோமோ ரூ.82 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

    டாடா டொகோமோ அறிவித்துள்ள ரூ.82 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், 2ஜிபி 3ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங்-இன் போதும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றது.



    ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.98 திட்டத்தில் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் 2 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் வழங்கப்படுகிறது, டொகோமோ வழங்கும் டேட்டா 3ஜி வேகம் கொண்டது ஆகும்.

    புதிய சலுகையில் டாடா டொகோமோ அறிவி்த்திருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை கடந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

    இதேபோன்று ரூ.179 விலையில் பிரீபெயிட் சலுகையை டொகோமோ அறிவித்துள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், 3ஜி வேகத்தில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    மற்ற டெலிகாம் நிறுவனங்களை போன்று டொகோமோவிலும் ரூ.349 மற்றும் ரூ.499 விலையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தினமும் 1.4 ஜிபி டேட்டாவினை முறையே 56 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. புதிய சலுகைகளை டாடா டொகோமோ செயலியை டவுன்லோடு செய்து பெற முடியும்.
    Next Story
    ×