search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆண்ட்ராய்டு கோ ஓ.எஸ்.கான ஜிமெயில் கோ ஆப் வெளியானது
    X

    ஆண்ட்ராய்டு கோ ஓ.எஸ்.கான ஜிமெயில் கோ ஆப் வெளியானது

    ஆண்ட்ராய்டு 8.1 கோ (ஓரியோ) இயங்குதளத்திற்கான ஜிமெயில் கோ செயலி இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கூகுள் அசிஸ்டண்ட் கோ, ஜிபோர்டு கோ, யூடியூப் கோ, மேப்ஸ் கோ செயலிகளை தொடர்ந்து ஜிமெயில் கோ செயலி வெளியிடப்பட்டுள்ளது. புதிய செயலி குறைந்த அளவு ரேம் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கூகுளின் கோ எடிஷன் செயலிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு கோ (ஓரியோ எடிஷன்) இயங்குதளத்தில் வேலை செய்யும். மற்ற கோ எடிஷன் செயலிகளை போன்றே புதிய செயலியும் குறைந்த மெமரியில் ஜிமெயில் போன்ற வேகத்தில் இயங்குகிறது. இதன் ஸ்மார்ட் இன்பாக்ஸ் அம்சம் அனைத்து தகவல்களையும் பாதுகாப்பாகவும், ஒருங்கிணைத்தும் வைத்து கொள்கிறது. 

    ஜிமெயில் கோ செயலியில் மின்னஞ்சல் வரும் போதே நோட்டிபிகேஷன்கள் வருகிறது. இவற்றை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் படித்து, பதில் அனுப்ப முடியும். மின்னஞ்சல்களை தேடும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது, எனினும் இந்த அம்சம் ஆஃப்லைனில் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜிமெயில் கோ செயலியில் டிரைவ் அட்டாச்மெண்ட் ஆப்ஷன் மற்றும் பணம் அனுப்பும் வசதிகள் வேலை செய்யாது. ஜிமெயில் செயலி போன்றே ஜிமெயில் கோ செயலியிலும் 15 ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு கணக்குகளை சப்போர்ட் செய்கிறது. இதனால் ஜிமெயில் மற்றும் இதர மின்னஞ்சல் முகவரிகளை செட்டப் செய்து கொள்ள முடியும். 

    கோ எடிஷன் செயலி என்பதால் இந்த செயலி குறைந்த ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜிமெயில் கோ செயலியை வாடிக்கையாளர்கள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும்.
    Next Story
    ×