search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 வெளியானது
    X

    இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 வெளியானது

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடலை வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை விட இம்முறை இருமடங்கு அதிக இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் நோக்கியா 6 (4 ஜிபி) மாடல் முன்னதாக 3 ஜிபி ரேம் 
    கொண்டிருந்தது. 

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. முன்னதாக நோக்கியா 6 (4 ஜிபி) மாடல் சீனாவில் வெளியிடப்பட்டது. இதேபோன்று சர்வதேச வெளியீட்டிற்கு முன் நோக்கியா 6 சீனாவில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டது.



    நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் நோக்கியா 6 (4 ஜிபி) விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ.2000 வரை கூடுதல் எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. நோக்கியா 6 (4 ஜிபி) மாடலின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. இதன் விற்பனை பிப்ரவரி 20-ம் தேதி துவங்குகிறது.
    Next Story
    ×