பீஜிங்:
சீனாவில் நாள் முழுக்க ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிய பெண்மணி தனது கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 21 வயதான வு சியோஜிங் என்ற பெண்மணி தனது ஸ்மார்ட்போனில் தொடர்ச்சியாக ஹானர் ஆஃப் கிங்ஸ் என்ற கேமினை விளையாடி வந்துள்ளார். ஸ்மார்ட்போனில் ஒரே சமயத்தில் பலர் விளையாடக்கூடிய மல்டி பிளேயர் கேமான ஹானர் ஆஃப் கிங்ஸ் கேமினை வு சியோஜிங் தொடர்ந்து பல மணி நேரம் தனது ஸ்மார்ட்போனில் விளையாடி வந்துள்ளார்.
நிதித்துறையில் பணியாற்றி வரும் சியோஜிங் கேமிங் விளையாடிய போது திடீரென தனது வலது கண் பார்வையை இழந்துள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சியோஜிங் ரெட்டினல் ஆர்டரி அகல்ஷன் (Retinal Artery Occlusion) எனும் நோய் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் RAO கோளாறு, நிரந்தரமாக கண் பார்வையை பறிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சியோஜிங் கண்பார்வையிழக்க கேம் விளையாடிவது காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சியோஜிங் கண் பார்வையை இழந்த சம்பவம் சீன சமூக வலைத்தளமான வெய்போவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிடைக்கும் நேரம் முழுக்க 'சிறிதும் இடைவெளியின்றி தொடர்ந்து கேம் விளையாடும் பழக்கம் கொண்டிருந்தேன். எனது பெற்றோர் ஸ்மார்ட்போன் கேம் விளையாடுவதை நிறுத்த பலமுறை எச்சரித்தனர். பெற்றோர் சொன்னதை கேட்காமல் தொடர்ந்து பல மணி நேரம் கேம் விளையாடியதைத் தொடர்ந்து பெற்றோர் சொன்னது போன்றே கண் பார்வை பறிபோனது.' என சியோஜிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஹானர் ஆஃப் கிங்ஸ் கேம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருப்பதோடு, தற்சமயம் இதனை 20 கோடி பேர் விளையாடி வருகின்றனர். இந்த கேமினை உருவாக்கிய டென்சென்ட் நிறுவனம் 12 வயதாகாத குழந்தைகள் இந்த கேமினை தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடினை விதித்தது குறிப்பிடத்தக்கது.