search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    விவோ நிறுவனத்தின் X ஃபோல்டு 3 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீரிசில் விவோ X ஃபோல்டு 3 மற்றும் விவோ X ஃபோல்டு 3 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக விவோ சீனா வலைதளம் மற்றும் வெய்போ பதிவுகளில் விவோ நிறுவனம் தனது விவோ X ஃபோல்டு 3 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. புது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களுடன் விவோ வாட்ச் 3, விவோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 4 மற்றும் விவோ பேட் 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     


    டீசர்களின் படி புதிய விவோ X ஃபோல்டு 3 மாடல்கள் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடல்கள் இதுவரை வெளியானதில் குறைந்த எடை மற்றும் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4 வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 64MP பெரிஸ்கோப் கேமரா, OIS, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
    • விலை மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி போன் மாடல்களை தங்கம் அல்லது வைரம் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து ஸ்பெஷல் எடிஷன் மாடல்களாக வெளியிடுவதில் புகழ்பெற்ற நிறுவனம் கேவியர். ஏற்கனவே விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு அலங்கரித்து அவற்றின் விலையை கேவியர் மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

    இந்த வரிசையில், கேவியர் நிறுவனம் ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புது வெர்ஷன் ஆப்பிள் விஷன் ப்ரோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ விசேஷ எடிஷனில் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் குறிப்பிட்ட பாகங்கள் இடம்பெற்று இருக்கும். இதன் விலை கேவியரின் மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

     


    ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் வட்ட வடிவ வென்ட்கள் மற்றும் ஆரஞ்சு அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ்புறத்தில் விஷன் ப்ரோ முன்புற டிசைனை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இந்த டிசைன் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என இரு மாடல்களிலும் கிடைக்கிறது.

    விலையை பொருத்தவரை கேவியர் வடிவமைத்த ஆப்பிள் விஷன் ப்ரோ தழுவிய ஐபோன் 15 ப்ரோ 8 ஆயிரத்து 060 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் என்று துவங்குகிறது. கேவியர் ஃபியூச்சர் கலெக்ஷன் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் புதிய ஐபோனுடன் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டெஸ்லா சைபர் டிரக் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

     


    கேலக்ஸி S24 அல்ட்ரா சைபர் டிரக் எடிஷனில் டெஸ்லாவின் சைபர் டிரக் மாடலை தழுவிய டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சைபர் டிரக் தோற்றம் கொண்டிருக்கிறது. மேலும் சைபர் டிரக் ஹெட்லைட் நிறம், சைபர் டிரக்-இல் பயன்படுத்தப்பட்ட மெட்டல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சியோமியின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 16 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய சியோமி ஸ்மார்ட்போன் 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கலாம்.

    சியோமி நிறுவனத்தின் மிக்ஸ் ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி மிக்ஸ் ஃபோல்டு 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இந்த மாடல் உருவாகி இருக்கிறது. புதிய மிக்ஸ் ஃபோல்டு 4 குறித்து சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், புதிய சியோமி மிக்ஸ் ஃபோல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர், சார்ஜிங் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

     


    டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி சியோமி மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலின் கிரீஸ் முந்தைய மாடலை விட சிறியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, புதிதாக பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் இருவழி செயற்கைக்கோள் சார்ந்த தகவல் பரிமாற்ற வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். ேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங் வழங்கப்படலாம். 

    • ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் புதிய X6 நியோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் இணையததில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

     


    இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களின் படி போக்கோ X6 நியோ மாடலில் பெசல் லெஸ் டிசைன், 7.69mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 120Hz AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, அதிகபட்சம் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 3x லாஸ்லெஸ் இன்-சென்சார் ஜூம் வசதி வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 16MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

    சியோமி 14 ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இரண்டும் சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். முன்னதாக இந்த மாடல்கள் சீனா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.

    புதிய சியோமி 14 அல்ட்ரா மாடலில் 6.78 இன்ச் 2K கஸ்டம் C8 AMOLED LTPO ஸ்கிரீன், 1-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், HDR 10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு உள்ளது.


    சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள்:

    6.73 இன்ச் 3200x1440 பிக்சல் 2K OLED LTPO டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    16 ஜி.பி. ரேம்

    512 ஜி.பி. மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    சியோமி ஹைப்பர் ஒ.எஸ்.

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ் (லெய்கா)

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    50MP டெலிபோட்டோ லென்ஸ், OIS

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ

    டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    5300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    90 வாட் வயர்டு சார்ஜிங்

    80 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் வீகன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 12-ம் தேதி துவங்குகிறது. 

    • புதிய ரியல்மி ஸ்மார்ட்போனிற்கு டீசர்கள் வெளியாகி வருகின்றன.
    • இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    புதிய ஸ்மார்ட்போனிற்காக மைக்ரோசைட் ஒன்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் வெளியாகி இருக்கும் புதிய டீசர்களில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் இதர அம்சங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி நார்சோ 70 ப்ரோ மாடலில் சோனி IMX890 சென்சார் மற்றும் OIS வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

     


    இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அம்சங்களை திரையில் நேரடியாக தொடாமல், சற்று தூரத்திலேயே செய்கைகள் மூலம் இயக்க முடியும். முதற்கட்டமாக இந்த வசதியின் கீழ் பத்து வெவ்வேறு ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 70 ப்ரோ மாடலில் ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே டிசைன், ஃபிளாட் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதன் வலதுபுறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வழங்கப்படுகிறது. பின்புறத்தில் வட்ட வடிவம் கொண்ட கேமரா பம்ப் வழங்கப்படுகிறது.

    • போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.
    • குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்

    போக்கோ நிறுவனம் ஏர்டெல் உடன் கூட்டணி அமைத்து போக்கோ C51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இந்த கூட்டணியை நீட்டிக்கும் வகையில், ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதனை போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டான்டன் எக்ஸ் பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி ஏர்டெல் கூட்டணியில் உருவான புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ நியோ சீரிசில் இடம்பெற்று இருக்குமா அல்லது போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.



    அதில், இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனின் ஏர்டெல் வெர்ஷனாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். புதிய சாதனம் பற்றி வேறு எந்த தகவலும் குறிப்பிடாமல், அது இந்திய சந்தையில் அறிமுகமாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த சாதனம் போக்கோ C சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் சேவைகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் லாக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் தவிர போக்கோ இந்தியா நிறுவனம் தனது போக்கோ X6 நியோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் போக்கோ X6 மற்றும் போக்கோ X6 ப்ரோ மாடல்களுடன் இணையும். 

    • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • நத்திங் போன் 2a மாடலில் பிளாஸ்டிக் பேக் உள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் போன் 2a மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மசிமோ விக்னெலியின் நியூ யார்க் சப்வே மேப்-ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரு மாடல்களில் கிலாஸ் பேக் வழங்கப்பட்டிருந்த நிலையில், நத்திங் போன் 2a மாடலில் பிளாஸ்டிக் பேக் கவர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    நத்திங் போன் 2a அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1084 பிக்சல் FHD+ OLED ஃபிலெக்சிபில் AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர்

    மாலி-G610 MC4 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த நத்திங் ஒ.எஸ். 2.5

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி.டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    45 வாட் வயர்டு சார்ஜிங் வசதி

    இந்திய சந்தையில் நத்திங் போன் 2a மாடல் வைட் மற்றும் டார்க் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய நத்திங் போன் 2a மாடலின் விற்பனை மார்ச் 12-ம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது. முதல் விற்பனையில் நத்திங் போன் 2a மாடல் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    • இதில் புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
    • இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனங்கள் செய்தி குறிப்பின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இம்முறை புதிய மேக்புக் ஏர் மாடல்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் புதிய நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் மேக்புக் ஏர் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சாதனங்கள் வரும் வாரத்திலேயே அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

     


    பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் வரும் வாரங்களில் ஆப்பிள் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள், மேம்பட்ட ஐபேட் ஏர், 12.9 இன்ச் மாடல், புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.

    மேக் சாதனங்களை பொருத்தவரை 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்கள் அதிநவீன M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மிக விரைவில் அறிவிக்க ஆப்பிள் விளம்பர குழுக்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5 வழங்கப்பட்டு இருக்கிறது.
    • கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கேலக்ஸி A15 5ஜி மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2408 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP லென்ஸ், 2MP சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., 3.5mm ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.

    இதர சென்சார்களாக அக்செல்லோமீட்டர், கைரோ சென்சார், ஜியோ-மேக்னடிக் சென்சார், விர்ச்சுவல் பிராக்சிமிட்டி சென்சார் உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5 வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி A15 5ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 17 ஆயிரத்து 999

    கேலக்ஸி A15 5ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 19 ஆயிரத்து 499

    கேலக்ஸி A15 5ஜி 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 22 ஆயிரத்து 499

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A15 5ஜி ஸ்மார்ட்போன் புளூ பிளாக் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

    • வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.
    • இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய முடியும்.

    2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மோட்டோரோலா நிறுவனம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய வகை ஸ்மார்ட்போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் அதன் டிசைன் மற்றும் அது வழங்கும் வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.

    பென்டபில் போன் என்ற வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேட்பதற்கு கற்பனை போன்றிருக்கும் பல செயல்களில் அசாத்தியமாக செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் இந்த கான்செப்ட் மாடல் பயனர்கள் தங்களின் போனினை இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.

     


    இதனை வழக்கமான ஸ்மார்ட்போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது வேறு வடிவத்திற்கு மாற்றியும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிநவீன வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை மணிக்கட்டில் பொருந்திக் கொள்ளும் வகையில் வளைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனில் இருந்து 6.9 இன்ச் அளவில் ஸ்மார்ட்வாட்ச் ஆக இந்த சாதனம் மாறிவிடும்.

    இதுதவிர இதில் உள்ள "டென்ட் மோட்" மூலம் கேமிங் செய்வது, ஸ்மார்ட்போனின் மேல்புறத்தை சற்றே வளைத்து ஸ்டாண்ட் மோடில் வைப்பது என பலவித பயன்பாடுகளை புதிய மோட்டோ பென்டபில் கான்செப்ட் அசாத்தியமாக கையாள்கிறது. ஸ்மார்ட்போன் பல வடிவங்களில் வளைக்க முடியும் என்பதால், எந்த வடிவத்தில் இருக்கும் போதும் செயலிகள் சீராக இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இதனை மோட்டோரோலா வடிவமைத்துள்ளது.

     


    புதிய கான்செப்ட் மாடலின் பின்புறம் ஆரஞ்சு நிறத்தில் ஃபேப்ரிக் போன்ற பேனல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சக்திவாய்ந்த காந்தம் அடங்கிய மெக்கானிசம், ஸ்மார்ட்போன் கையில் வாட்ச் போன்று அணிந்திருக்கும் போது, கையில் இருந்து நழுவாமல் பார்த்துக் கொள்கிறது. ரிஸ்ட் மோடில் இந்த சாதனம் எதிர்காலத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்.

    இத்தனை வசதிகள் மற்றும் பல்வேறு வடிவங்களில் வளைக்கும் திறன் கொண்ட கான்செப்ட் மாடல் எவ்வளவு காலம் உழைக்கும், தொடர்ச்சியான பயன்பாடுகளை இந்த சாதனம் எந்தளவுக்கு எதிர்கொள்ளும், இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை எப்படி சரி செய்வது என்ற விஷயங்களுக்கு தற்போதைக்கு பதில் இல்லை. மேலும், இத்தகைய சாதனத்திற்கு அதிகளவு பேட்டரி தேவைப்படும், பேட்டரி அடிக்கடி தீர்ந்து போகும் வாய்ப்பும் அதிகம் தான்.

     


    நல்லபடியாக இது கான்செப்ட் வடிவில் இருப்பதால், மோட்டோரோலா இந்த சாதனம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், இதனை தொடர்ச்சியாக மேம்படுத்தும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அந்த வகையில், இந்த சாதனத்தை பொது வெளியில் அனைவருக்கும் ஏற்ற வகையில் அறிமுகப்படுத்த மோட்டோரோலா மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது.

    • இத்தகைய வசதி கொண்ட முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றது.
    • டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

    லெனோவோ நிறுவனம் தனது புதிய தின்க்பேட் லேப்டாப் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் உள்ள டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே (Transparent Display) ஆகும். இத்தகைய வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் முதல் லேப்டாப் இது என்ற பெருமையை புதிய லெனோவோ தின்க்பேட் பெற்று இருக்கிறது.

    புதிய தின்க்பேட் கான்செப்ட்-இல் 17.3 இன்ச் அளவில் மைக்ரோ எல்.இ.டி. டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே பார்டர்லெஸ் டிசைன் மற்றும் கண்ணாடி போன்று அதன் பின்புறம் இருப்பவற்றை பார்க்க செய்கிறது. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

     


    இதில் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இதனால் நிறங்கள் உண்மைக்கு நிகராகவும், அதிகளவு அடர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1000 நிட் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், நேரடி சூரிய வெளிச்சத்திலும் காட்சிகளை சீராக பார்க்க செய்கிறது.

     


    டெக் வொர்ல்டு 2023 நிகழ்வை ஒட்டி, லெனோவோ மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்தின. இந்த கான்செப்ட்-ஐ பயனர் தேவைகளுக்கு ஏற்ப பல வடிவங்களில் மடித்துக் கொள்ளலாம். புதிய தின்க்புக் டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே லேப்டாப் கான்செப்ட் எப்போது உற்பத்தி நிலையை அடையும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ×