
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியான ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான யுனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வித மாடல்களில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
இந்தியாவில் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.5,999 மற்றும் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.6,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்லைனில் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.7,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் எச்டி 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
- ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
இந்தியாவில் 2 ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போனினை முதலில் வாங்கும் ஐந்து லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.4,999க்கு விற்பனை செய்யப்பட்டது. இத்துடன் ரெட்மி 5A இரண்டு மாடல்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு ரூ.198 விலையில் குறைந்தபட்சம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.100 மதிப்புடைய பத்து வவுச்சர்களை வழங்கப்படுகிறது.