
புதுடெல்லி:
இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களின் சராசரி டேட்டா பயன்பாடு தினமும் 70 எம்.பி.யாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் சராசரியாக 1.6 ஜிபி அளவு டேட்டாவினை தினமும் பயன்படுத்தி இருக்கின்றனர் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாகத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டேட்டா பயன்பாடு மட்டுமின்றி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் சேவைகளின் மின்னணு விநியோக முறையும் அதிகரித்து இருப்பதாக மக்களவைக்கு ரவி ஷங்கர் பிரசாத் அனுப்பிய பதிலில்ல குறிப்பிட்டிருக்கிறார்.
ஜூன் 2014-ம் ஆண்டில் டேட்டா பயன்பாடு மாதம் 70.10 எம்.பி.யாக இருந்தது. இந்த எண்ணிக்கை செப்டபம்ர் 2017 ஆண்டில் 1600 எம்.பி.யாக அதிகரித்திருக்கிறது என அவர் தெரிவித்தார். ஜூன் 201-இல் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25.94 கோடியாக இருந்தது. செப்டம்பர் 2017-இல் இந்த எண்ணிக்கை 42.9 கோடியாக அதிகரித்திருக்கிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் டிசம்பர் 2015-இல் 60.7 கோடியாக இருந்து, அக்டோபர் 2017-இல் 153 கோடியாக அதிகரித்திருக்கிறது. பொது சேவை மையங்கள் டிஜிட்டல் சேவைகளை நாட்டு அனைத்து பகுதிகள் குறிப்பாக ஊரக பகுதிகளை சேர்த்து கொண்டு செல்கின்றன என பிரசாத் தெரிவித்தார்.
நவம்பர் 30, 2017 வரை 2,71,311 பொது சேவை மையங்கள் இயங்கி, நாடு முழுக்க இ-சேவைகளை வழங்கி வருகின்றன, இவற்றில் 1.73 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இயங்கி வருகின்றன. 2013-இல் இணைய பரிவர்த்தனைகள் 241 கோடியாக இருந்த நிலையில், 2017-இல் 3013 கோடியாக அதிகரித்திருக்கிறது.