search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட சர்ஃபேஸ் சாதனம் உருவாக்கும் மைக்ரோசாஃப்ட்
    X

    ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட சர்ஃபேஸ் சாதனம் உருவாக்கும் மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் ARM பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் அதன்படி இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து டெக்கிரன்ச் வெளியிட்டுள்ள தகவல்களில் "மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ARM சார்ந்த ஹார்டுவேர் ஒன்றை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சாதனம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை." என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் ரெட்மொன்ட் கட்டிடத்தில் அந்நிறுவனம் சார்பில் ரேடியோ பொறியாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் செய்துள்ளது. மைக்ரோசாஃப்டின் ரெட்மொன்ட் கட்டிடங்களில் சர்ஃபேஸ் மற்றும் ஹார்டுவேர் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சமீபத்திய விளம்பரத்தின் படி அந்நிறுவனம் எல்டிஇ பிரிவில் அனுபவமுள்ள பொறியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், குவால்காம் நிறுவனம் அதனை வரும் வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஹவாயில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப அமர்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் புதிய சிப்செட் நிகழ்வின் முதல் நாளிலேயே அறிமுகம் செய்யப்படலாம் எனினும் இந்த சிப்செட் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×