search icon
என் மலர்tooltip icon

    வேட்பாளர்கள் - 2021

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், 1 தொகுதியில் திமுக கூட்டணி பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவித்துள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

    குமாரபாளையம் அதிமுக
    திருச்செங்கோடு திமுக
    பரமத்தி வேலூர் அதிமுக
    நாமக்கல் கடும்போட்டி
    சேந்தமங்கலம் அதிமுக
    ராசிபுரம் அதிமுக
    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77.91 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தூத்துக்குடியில் 70 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    கோவில்பட்டி- 67.42%

    ஓட்டப்பிடாரம்- 69.82%

    ஸ்ரீவைகுண்டம்- 72.34%

    தூத்துக்குடி- 65.04%

    திருச்செந்தூர்-70.04%

    விளாத்திகுளம்-76.52%
    ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் இருந்து இரவு 8.20 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.



    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வெயில் சுட்டெரித்தது. வெயில் 107.78 டிகிரியாக பதிவானது. மேலும் ஜோலார்பேட்டை மற்றும் சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி, புது ஓட்டல் தெருவு, பக்கிரிதக்கா, பால்னாங்குப்பம், ஏலகிரி கிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 11 மணியளவில் இருந்து தொடர்ந்து இரவு 8.20 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் தடை செய்யப்பட்டது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வெங்களாபுரம் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் உயர் மின் அழுத்தம் பழுதுப்பார்க்கும் பணிக்காக 2 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பழுது சரி செய்ததும் மின்சாரம் வினியோகம் செய்யப்படும், எனத் தெரிவித்தனர்.
    பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்ல இந்த பட்ஜெட் ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். கொரோனா பரவலுக்கு மத்தியில் இதைவிட ஒரு சிறப்பான பட்ஜெட்டை எதிர்பார்க்க முடியாது.

    இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த பட்ஜெட், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை சீர் செய்யவும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய விஷயம்.

    விவசாயத்துறையை பலப்படுத்துதல், திறன் மேம்பாடு, கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் விருப்பப்படி விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக அதிகரிக்க இந்த பட்ஜெட் உதவும். விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் சந்தைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நுண்ணிய நீர்ப்பாசன திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். ரெயில்வே வளர்ச்சிக்கு ரூ.1.07 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு ரூ.14 ஆயிரத்து 778 கோடி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த நிதி ஒதுக்கீடு காரணமாக பெங்களூருவில் கூடுதலாக 58 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடியும். இது கர்நாடகத்திற்கு மிகப்பெரிய பரிசாகும். பாரத் மாலா திட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ.3.30 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பஸ் போக்குவரத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நகரங்களில் வாகன நெரிசலை குறைக்க உதவும். சுகாதாரத்துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதை வரவேற்கிறேன்.

    75 வயதுக்கு மேற்பட்ட மூத்த மக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது. மொத்தத்தில் இந்த பட்ஜெட், பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட். அத்துடன் வளர்ச்சி திட்டங்களுக்கு வேகம் கொடுப்பதாகவும் பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
    மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவிக்கையில் ‘‘மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

    மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
    பாதுகாப்பு துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இந்த நிலையில் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத. கடந்த 2020-2021-ம் நிதியாண்டில் 4.71 லட்சம் கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதியாண்டில் 19 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

    4.78 லட்சம் கோடி ரூபாயில் 1.15 கோடி ரூபாய் பென்சனுக்காக செலவிடப்படும். கடந்த பட்ஜெட்டில் 1.33 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அது 1.15 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

    மொத்த வருவாய் செலவினம், சம்பளம் செலுத்துதல் மற்றும் நிறுவனங்களை பராமரித்தல் ஆகியவற்றுக்கான செலவுகளை உள்ளடக்கியது ரூ. 2.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவு 1.35 லட்சம் கோடியாகும். இதன்மூலம் பாதுகாப்பு துறைக்கு ராணுவ ஆயுதங்கள், போர் விமானங்கள், போர்க்கப்பல் போன்றவற்றை வாங்க முடியும்.
    இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கலாக இது அமைந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
    2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், 

    இந்த பட்ஜெட் தாக்கல் எந்த வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது மக்களைப் பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை. நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார்.

    இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கலாக இது அமைந்துள்ளது. எதிர்பார்த்ததைப்போல் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் முடிவு மக்களை பாதிக்கும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் எந்தக் குறைப்பும் இடம் பெறவில்லை. அந்த அறிவிப்புகள் ஒதுக்கீடாகவே உள்ளன. நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது என, மத்திய பட்ஜெட் குறித்து மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
    மத்திய பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில் ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது. மத்திய பட்ஜெட் அறிவிப்புகளில் தெளிவு இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. 1.03 லட்சம் கோடி ரூபாயில் 3500 கி.மீட்டர் சாலை என்ற அறிவிப்பு இருந்த போதிலும், அதற்கான நிதி ஒதுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
    மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு சலுகைகள் இடம் பெற்றன. 

    இந்த நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி கூறியதாவது, 

    மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன. மதுரை கொல்லம், சித்தூர்- தச்சூர் சாலைத் திட்டங்கள் தமிகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும்.

    புதிய மெட்ரோ லைட், மெட்ரோ நியோ திட்டங்களை கோவை, மதுரையில் செயல்படுத்த ஒப்புதல் தர வேண்டும் என்றார்.
    மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்தன.
    மும்பை:

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், சுகாதாரம், வாகனம் மற்றும் உள்கட்டமைப்பு, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டங்கள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தின. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. 

    மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2315 புள்ளிகள் உயர்ந்து, 48,601 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 5 சதவீத உயர்வு ஆகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 14 ஆயிரத்தை கடந்து வர்த்தகம் ஆனது. வர்த்தக முடிவில் 646 புள்ளிகள் உயர்ந்து 14,281 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 4.74 சதவீத உயர்வு ஆகும்.

    சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன. 3 நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எல் அன்ட் டி, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன. 
    2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
    2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் 

    அதில் சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, பிரதமரின் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் 64,180 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும், நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 1.41 லட்சம் கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்கள் திரும்பப்பெறும் கொள்கை அறிமுகம், காப்பீட்டுத்துறையில் அந்திய நேரடி முதலீடு 49-ல் இருந்து 74  சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது போன்ற இடம் பிடித்திருந்தன.

    பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘‘மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை மறுந்துவிட வேண்டியதுதான். மோடி அரசு அவருடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு இந்தியாவின் சொத்தை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது’’ என விமர்சனம் செய்துள்ளார்.

    முன்னதாக பட்ஜெட்டில் ‘‘எம்எஸ்எம்இ-க்கு ஆதரவு, விவசாயிகள், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை உருக்க வேண்டும். உயிர்களை காப்பாற்ற சுகாதாரத்துறை செலவினங்களை அதிகரிக்க வேண்டும். எல்லைகளை காப்பாற் பாதுகாப்புதுறை செலவினங்களை அதிகரிக்க வேண்டும்’’ ஆகிய இடம் பெறற வேண்டும் எனத் தெரிவித்தார்.
    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பிரதமர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    முன்னெப்போதும் இல்லாத கடுமையாக சூழ்நிலைகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதுடன், உலகில் தன்னம்பிக்கையை வளர்க்கும் பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டில் தன்னம்பிக்கை பற்றிய பார்வை உள்ளது, சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. 

    விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. இதற்காக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் எளிதாக கடன் பெற முடியும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் உதவியுடன் ஏபிஎம்சி சந்தைகளை வலுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வரிச்சுமையை சாமானிய மக்கள் மீது சுமத்துவோம் என்று பலரும் நினைத்தார்கள். இருப்பினும், நாங்கள் ஒரு வெளிப்படையான பட்ஜெட்டில் கவனம் செலுத்தினோம். மொத்தத்தில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    நிதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சிர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் வரி விதிப்பு முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். 
    ×