search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்-விளாடிமிர் புதின் சந்திப்பா?
    X

    டொனால்டு டிரம்ப்-விளாடிமிர் புதின் சந்திப்பா?

    ஜப்பானில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மாஸ்கோ:

    2019 ஆம் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு வரும் ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் நடைபெற உள்ளது.  அதில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்கள் பங்குபெற உள்ளனர். இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாக  ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்லின் செய்தி வெளியிட்டுள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெம்லின் செய்தித்தொடர்பாளர்  டிமிட்ரி பெஷ்கோவ் கூறியதாவது:-



    ஜப்பானில் இம்மாதம் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  ஒருவேளை அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நிகழ்ந்தால் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். இவ்வாறு பெஷ்கோவ் கூறியுள்ளார்.

    உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் நடந்துவரும் நிலையில் இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
    Next Story
    ×