search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம் பிரதமரை அழைத்து வர பாஸ்போர்ட் இல்லாமல் சென்ற விமானி கத்தாரில் பிடிபட்டார்
    X

    வங்காளதேசம் பிரதமரை அழைத்து வர பாஸ்போர்ட் இல்லாமல் சென்ற விமானி கத்தாரில் பிடிபட்டார்

    வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவை அழைத்து வருவதற்காக சென்ற விமானி பாஸ்போர்ட் இல்லாததால் கத்தார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
    தோஹா:

    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது பின்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.

    அவரை  தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து போயிங் 787 டிரீம்லைனர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.



    அப்போது அந்த விமானத்தை ஓட்டிவந்த கேப்டன் பஸல் மஹ்முத் என்பவர் பாஸ்போர்ட் இல்லாமல் வந்திருப்பதை விமான நிலைய குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரை உள்ளே நுழையவிடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    இந்த தகவல் வங்காளதேசம் தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஷேக் ஹசினாவை அழைத்து வருவதற்காக வேறொரு விமானி அனுப்பி வைக்கப்பட்டார். பாஸ்போர்ட் இல்லாமல் சென்ற விமானியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வங்காளதேசம் நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×