search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது
    X

    21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது

    அமெரிக்காவில் ஸ்டீல் நிறுவனம் ஒன்றின் 21 தளங்கள் கொண்ட மாபெரும் கட்டிடம், 16 ஆயிரம் டன் ஸ்டீலுடன் தகர்க்கப்பட்டது.
    வாஷிங்டன்:

    ஓரிடத்தில் 4 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டால் எழும் சத்தம் சுற்றி இருக்கும் சில இடங்களில் அதிர்வை ஏற்படுத்தும். அதன் பதற்றம் அடங்கவே சில மணி நேரங்கள் ஆகும். அப்படியிருக்கும்போது 21 தளங்கள், 16 ஆயிரம் டன் ஸ்டீல்கள் என்றால் கட்டிடத்தின் சத்தத்தை கற்பனை செய்து பாருங்கள்.

    அமெரிக்காவின் பென்சிலுவேனியாவில் உள்ள பெத்லகேம் பகுதியில் உள்ளது ஸ்டீல் நிறுவனத்தின் 21 மாடி கட்டிடம். இந்த நிறுவனம் கடந்த 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் கட்டிடம் அப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.



    இந்நிலையில் இந்த நிறுவனத்தில் 16,000 டன் ஸ்டீல்களுடன் இருந்த 21 தளங்கள் கொண்ட இக்கட்டிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தகர்த்தப்பட்டது. 16 நொடிகளில் இக்கட்டிடம் நொறுங்கியது. இதன் சத்தம், அதனைச் சுற்றி பல கிலோமீட்டர் தூரத்துக்கு கேட்டது.



    அதனைச் சுற்றி இருந்த பக்கங்களில் ஏற்பட்ட அதிர்வு, காலின் கீழ் கட்டிடம் நொறுங்கியது போல அதிர்ச்சியாக இருந்தது என அப்பகுதியில் வசித்தவர்கள் கூறினர். மேலும்  சிலர் கட்டிடம் நொறுங்குவதை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.

    இந்த கட்டிடம் நொறுங்கிய வீடியோ காட்சியினை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களும் அதிர்ச்சியுடன்தான் பகிர்ந்து வருகின்றனர்.
    Next Story
    ×