search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ - வீடியோ
    X

    மனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ - வீடியோ

    மனிதர்கள் குறுகலான பாதையில் நடக்கும் போது நிதானமாக செல்வதை போல, ரோபோ ஒன்று முதன்முறையாக குறுகலான பாதையில் பேலன்ஸ் செய்து நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. #RobotCakewalk
    வாஷிங்டன்:

    உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது.  பல நாடுகளும் மனிதனை ஒத்திருக்க கூடிய மற்றும் மனிதனின் செயல்களை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வல்லுனர்களின் முயற்சி சினிமாவில் பல முறை  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் அவ்வப்போது கிடைத்து வருகிறது.

    நிஜ வாழ்வில் ரோபோக்களின் செயல்பாடுகளை தானே இயங்குவதை நடைமுறைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சர்வதேச ரோபோ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று  மனிதர்களை போல இயங்கும் ரோபோக்களை தயாரித்து வருகிறது.

    இந்த ரோபோவின் ஒவ்வொரு பயிற்சியும் சமூக வலைத்தளத்தில் அப்டேட்டாக வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மிகவும் குறுகலான பாதையில் செல்ல நடை மேடை  போடப்பட்டுள்ளது.

    அந்த பாதையில் சிறிதும் தடுமாற்றம் இன்றி ப்ரோகிராம் செய்ததை போலவே இந்த ரோபோ சரியாக அடிமேல் அடிவைத்து நகர்ந்து பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் வளைவு நெளிவாக இருக்கும் குறுகலான பாதையையும் எளிதில் கடக்கிறது. இந்த வீடியோ அந்த நிறுவனந்த்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  #RobotCakewalk 


    Next Story
    ×