search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டனில் பெண்களிடம் வசீகரமாக பேசி பணமோசடி செய்த இந்தியருக்கு 6 ஆண்டு சிறை
    X

    லண்டனில் பெண்களிடம் வசீகரமாக பேசி பணமோசடி செய்த இந்தியருக்கு 6 ஆண்டு சிறை

    லண்டனில் பெண்களிடம் ஆன்லைனில் வசீகரமாக பேசி பணமோசடி செய்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. #IndianOriginManArrested
    லண்டன்:

    லண்டனில் வசிப்பவர் கீயர் வயாஸ். இவர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தொழில்துறையில் பணம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவராவார்.

    இதற்காக எளிதில் பணம் பெற என்ன வழி என சிந்தித்து வந்துள்ளார்.  அப்போது பெண்களை ஆன்லைனில் நம்பும்படி பேசினால், அவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம் எனும் எண்ணம் எழுந்துள்ளது.

    இதையடுத்து ஆன்லைனில் பெண்களிடம் தொடர்ந்து வசீகரமாகவும், நம்பும்படியும் பேசி வந்துள்ளான். மேலும் வயாஸ் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் கூரியுள்ளான்.   இவனது பேச்சில் இருந்த தெளிவை கண்டு 6 பெண்கள் வயாசிடம் தொடர்ந்து பேசியும், அவன் மீது  நம்பிக்கையும் வைக்க தொடங்கினர்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட வயாஸ், ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொழிலில் ஈடுபட போவதாகவும், பல்வேறு பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய போவதாகவும் கூறியுள்ளான்.  இதனால் பல கோடிகள் லாபம் பார்த்து விடலாம் எனவும் தனது திட்டங்களை அவர்களிடம் கூறி, பணம் கேட்டுள்ளான்.

    முதலீட்டை விட பல கோடிகள் அதிகம் திரும்ப கிடைக்கும் என நம்பிய அந்த பெண்கள், வயாஸ் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளனர். இது தொடரவே 2014-2017ம் ஆண்டு வரையிலான பகுதியில் ரூ.7 கோடி பறித்துள்ளான்.

    இதையடுத்து அப்பெண்கள் பணம் தருவதை நிறுத்திவிடவே, இதுவரை கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப வராது. ஆகையால் பணம் கொடுத்து தான் ஆக வேண்டும் என மிரட்டியுள்ளான்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விசாரணையில் மொத்தம் ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் வயாசை  கைது செய்து, அவனிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் வயாஸ் மீது  வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு கடந்த புதன் அன்று கிங்ஸ்டன் நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வயாசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளனர். #IndianOriginManArrested


     
     
    Next Story
    ×