search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூத் அசாருக்கு எதிரான ஐ.நா. நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு
    X

    மசூத் அசாருக்கு எதிரான ஐ.நா. நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்ததை அமெரிக்கா வரவேற்று உள்ளது. #MasoodAzhar
    நியூயார்க்:

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருப்பதை பல்வேறு நாடுகள் பாராட்டி உள்ளன. அந்தவகையில் அமெரிக்காவும் இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது.

    இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா தடை பட்டியலில் சேர்த்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. இதன் மூலம் ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் அசாருக்கு எதிராக சொத்து முடக்கம், பயண தடை மற்றும் ஆயுத தடை போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இந்த நடவடிக்கையை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக நிலையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எனினும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்து வரும் தொடக்க கட்ட நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×