search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
    X

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றுவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று சீனாவின் ராணுவ மந்திரியுடன் ஆலோசனை நடத்தினார். #NirmalaSitharaman #SCOmeet
    பிஷ்கெக்:

    சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.



    அவ்வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சீனாவின் ராணுவ மந்திரி வேய் ஃபெங்ஹே மற்றும் கிர்கிஸ்தான் ராணுவ தளபதி ரைம்பெர்டி டுய்ஷென்பியேவ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    தெற்காசிய பிராந்தியத்தில் நிலவிவரும் பயங்கரவாத அச்சுறுத்தல், உள்நாட்டு பாதுகாப்பு, உளவுத்துறை பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. #NirmalaSitharaman #SCOmeet
    Next Story
    ×