search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- குப்பையில் கிடந்த வெடிபொருள் வெடித்ததால் மக்கள் பீதி
    X

    கொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- குப்பையில் கிடந்த வெடிபொருள் வெடித்ததால் மக்கள் பீதி

    இலங்கையின் கொழும்பு அருகே உள்ள புகோடா நகரில் குப்பையில் கிடந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் என 359 பேர் பலியாகினர். இதேபோல் மேலும் தாக்குதல்களை நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிற பகுதிகளிலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொழும்பு புறநகரான புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.



    அங்குள்ள குப்பை பகுதியில் கிடந்த வெடிகுண்டு வெடித்திருக்கலம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். #SriLankaAttacks #SriLankaBlast
    Next Story
    ×