search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
    X

    பிலிப்பைன்சில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

    பிலிப்பைன்சில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பத்பன்கா மாகாணத்தில் பல நகரங்கள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

    இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தில் போரக், லுபாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இங்கு அடுக்குமாடி வீடுகள், காங்கிரீட் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    போரக் நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி தவித்த பலர் மீட்கப்பட்டனர்.

    இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

    நிலநடுக்கம் 6.1 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் வெளியாகவில்லை. #PhilippinesEarthquake
    Next Story
    ×