search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3 இந்தியர்கள் உள்பட 35 வெளிநாட்டினர் உயிரிழப்பு
    X

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3 இந்தியர்கள் உள்பட 35 வெளிநாட்டினர் உயிரிழப்பு

    இலங்கையில் இன்றுநிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலி 215 ஆக உயர்ந்துள்ள நிலையில் 3 இந்தியர்கள் உள்பட 35 பேர் வெளிநாட்டினரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. #3Indianskilled #35foreignerskilled #215killed #SriLankablasts #Colomboblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை இன்றிரவு 8 மணி நிலவரப்படி 215 ஆக உயர்ந்துள்ளது.

    இவற்றில் சில சம்பவங்கள் தற்கொலப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

    அங்குள்ள இந்தியர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான +94777903082, +94112422788, +94112422789 என்ற உதவி மையங்களின் கைபேசி எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    இலங்கைக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் செய்யவும், தேவைப்பட்டால் இந்தியாவில் இருந்து மருத்துவர் குழுவை அனுப்பி வைக்கவும் இந்தியா தயாராக உள்ளதாகவும் சுஷ்மா உறுதியளித்துள்ளார். #3Indianskilled #35foreignerskilled #215killed #SriLankablasts #Colomboblasts
    Next Story
    ×