search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் சுமையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்
    X

    கடன் சுமையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்

    கடன் சுமையால் நொடிந்து, தள்ளாட்டம் போடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜய் மல்லையா அனுதாபம் தெரிவித்துள்ளார். #JetAirways #VijayMallya
    லண்டன்:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில்  பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.



    இதன் விளைவாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கிங் பிஷர் ஏர்லைன்சுக்கு நேரடி போட்டியாக இருந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமாகும். தற்போது கடன் சுமையால் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களை இந்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடி கொடுத்து உதவிகரம் நீட்டியது. ஆனால் தனியார் விமான நிறுவனங்களுக்கு இவ்வாறு வஞ்சனை செய்கிறது. பொதுத்துறை வங்கிகளாக இருந்தாலும் எந்த பாகுபாடுமின்றி செயல்படதான் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். #JetAirways #VijayMallya


    Next Story
    ×