search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் படைகள் வேட்டையில் 100 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
    X

    ஆப்கானிஸ்தான் படைகள் வேட்டையில் 100 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

    ஆப்கானிஸ்தான் நாட்டு கூட்டுப்படைகள் கடந்த 48 மணி நேரம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த சுமார் 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghanforces #Talibanfighters
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், நாட்டின் வடமேற்கில் பட்கிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 48 மணிநேரம் கூட்டுப்படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 35 பயங்கரவாதிகள் காயமடைந்ததாகவும்  ராணுவ செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

    இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 ராணுவ வீரர்கள், 4 போலீசார் என 12 பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghanforces #Talibanfighters
    Next Story
    ×