search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்தில் அவாமி லீக் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
    X

    வங்காளதேசத்தில் அவாமி லீக் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

    வங்காள தேசத்தின் அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் கந்தி டான்சங்கியா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence
    டாக்கா:

    வங்காளதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி மாவட்டங்களில் நேற்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், இங்குள்ள ரங்கமாட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நேற்று மாலை எண்ணும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

    வங்காளதேசம் நாட்டில் மாவட்ட நிர்வாகங்களுக்கு நேற்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது கோஷ்டி மோதலில் தேர்தல் அதிகாரி உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த குழுவினர் நொய்மேலி பகுதி வழியாக வந்தபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேர்தல் அலுவலர் உள்பட 6 பேர் இறந்தனர்.

    இந்நிலையில் வங்காள தேசத்தின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் பிளச்சல்லா பகுதியின் தலைவர் சுரேஷ் கந்தி டான்சங்கியா இன்று காலை குடும்பத்தினருடன் படகில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென படகை மறித்த பயங்கரவாதிகள்,  சுரேஷின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  #Bangladeshdistrictpolls  #Bangladeshpollviolence 
    Next Story
    ×