search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்- டிரம்ப் மிரட்டல்
    X

    இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்- டிரம்ப் மிரட்டல்

    இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தகத்துக்கான முன்னுரிமை அந்தஸ்தை நீக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். #IndiaUSTrade #Trump #TradeTreatment
    வாஷிங்டன்:

    அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது இல்லை என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

    ஒரு பொருளுக்கு நாம் எதுவும் வரியாக வசூலிக்காதபோது, எந்த நாடும் அதே பொருளுக்கு 100 சதவீதம் வரி வசூலிப்பதை அமெரிக்கா இனி அனுமதிக்காது என்றும், நாமும் அதற்கு பதில் வரி விதிக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேபோல், துருக்கிக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக சலுகையையும் அமெரிக்கா பறிக்க உள்ளது.



    டொனால்டு டிரம்ப் உத்தரவின் படி, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக அமெரிக்க வர்த்தக அலுவலக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. #IndiaUSTrade #Trump #TradeTreatment 
    Next Story
    ×