search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகியது ரஷியா
    X

    அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகியது ரஷியா

    அமெரிக்காவுடன் 1987-ம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான உத்தரவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கையொப்பமிட்டார். #INFtreaty #Russiamissiletreaty #PutinsuspendsINFtreaty #Putin
    மாஸ்கோ:

    ரஷியா (முன்னாள் சோவியத் யூனியன்) - அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் தாங்கள் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் கடந்த 1987-ம் ஆண்டில் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன.
     
    இந்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்காமல் ரஷியா ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவிடம் உள்ள அத்துமீறலான ஏவுகணைகளை எல்லாம் அழிக்காவிட்டால் அந்நாட்டுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு தெரிவித்தார்.

    இந்த உடன்படிக்கைக்கான நிர்பந்தங்கள் எதற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம். தங்களிடம் உள்ள அத்துமீறலான ஏவுகணைகள், ஏவுத்தளங்கள் மற்றும் ஏவுகணை தொடர்பான இதர தளவாடங்களை ரஷியா அழிக்காவிட்டால் அந்நாட்டுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்கா வெளியேறி விடும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

    அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையை முறித்துக் கொண்டதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 2-2-2019 அன்று அறிவித்தார்.

    ‘எங்கள் அமெரிக்கப் பங்காளிகள் இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக தெரிவித்து விட்டதால் நாங்களும் இதில் எங்களது பங்களிப்பை விலக்கிக் கொள்கிறோம்’ என புதின் குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், அமெரிக்காவுடன் 1987-ம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான உத்தரவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கையொப்பமிட்டார். #INFtreaty #Russiamissiletreaty #PutinsuspendsINFtreaty #missiletreaty #Putin
    Next Story
    ×