
அமெரிக்காவில் டேவிஸ் லோவட் - கிறிஸ்டா டேவிஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர்.
கிறிஸ்டா கருவுற்று 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி பிறக்கும்போதே மிகவும் அரிதான சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளது.

இந்நிலையில் டேவிஸ், லோவட் இருவரும் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி, குழந்தை ரைலே உயிர் பிரியும் வரை கூடவே இருந்தனர். மேலும் டேவிஸ் குழந்தையை தொடர்ந்து கண்காணிக்கையில், ரைலே அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட அழவே இல்லை எனவும், இறப்பதற்கு சற்று முன் லேசாக அழுததை கண்டதாகவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார். பின்னர் ஆக்ஸிஜனின் அளவு கணிசமாக குறைந்து குழந்தையின் உயிர் பிரிந்தது.
இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின் படி, உயிரிழந்த குழந்தையின் இதயவால்வுகள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன. கிட்னி மற்றும் பிற உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டன. #womendonatesbabyorgan