search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்
    X

    அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

    வாஷிங்டனில் அமெரிக்கா-சீனா ஆகிய இருநாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. #Chinatariffs #UStariffs
    பீஜிங் :

    அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் அமெரிக்கா-சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை 2 நாட்களாக நடந்தது. இதில் அமெரிக்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அறிவுசார் சொத்துகளை அமெரிக்காவுடன் சேர்ந்து பாதுகாக்கவும் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக பீஜிங்கில் உள்ள செய்தி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் அறிவுசார் சொத்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் சீனா அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்கள், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், ஆற்றல் மிகுந்த பொருட்களை இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறது என்று அந்த செய்தி ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்த மாதம்(மார்ச்) 1-ந் தேதிக்குள் இருநாடுகளுக்கும் இடையே கடந்த 90 நாட்களாக நடந்து வந்த வர்த்தக ரீதியிலான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு வாஷிங்டன் - பெய்ஜிங் இடையே நடந்த வர்த்தகத்தில் 360 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பின்படி ரூ.2,55,92,40 கோடி) வரி திணிக்கப்பட்டது. இது உலக மார்க்கெட்டை பெரிய அளவில் பாதித்தது.

    இதுபற்றி சீனா-அமெரிக்கா வர்த்தக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சீனா-அமெரிக்கா வர்த்தகம் சீரான அளவில் முன்னேற பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார். #Chinatariffs #UStariffs 
    Next Story
    ×