search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் உயிரை உறைய வைக்கும் கடுங்குளிர்- 8 பேர் பலி
    X

    அமெரிக்காவில் உயிரை உறைய வைக்கும் கடுங்குளிர்- 8 பேர் பலி

    அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #USSnowstorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இது குளிர்காலம் ஆகும். அங்கு தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.  நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக இருக்கிறது. சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும், மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 40 டிகிரியை தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    துருவ பகுதியில் இருக்கும் குளிரை விட இப்போது அமெரிக்காவில் அதிக குளிர் வீசி வருகிறது. சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு இதுவரை 8 பேர்  பலியாகியுள்ளனர். அயோவா பகுதியில் மாணவர் ஒருவர் கல்லூரி வாசலிலேயே கடும் குளிரில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதுபோன்று அமெரிக்காவின்  பல பகுதிகளில்  நிலவிவரும் மோசமான குளிரின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்தன. இந்த பனிப்பாறைகள் சிதைவு மேலும் விரிவடையும் என தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் சுமார் 250 மில்லியன் மக்கள் இந்த கடுங்குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் புளோரிடா போன்ற தென்மாநிலங்கள் இந்த கடுங்குளிரில் இருந்து தப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #USSnowstorm 
    Next Story
    ×