search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா.சபையில் ஹமாஸ் போராளிகளை கண்டித்து தீர்மானம் - வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை
    X

    ஐ.நா.சபையில் ஹமாஸ் போராளிகளை கண்டித்து தீர்மானம் - வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியான காசாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. #Indiaabstains #GeneralAssemblyresolution #condemnHamas #Hamas
    நியூயார்க்:

    பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் நாட்டு  ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

    ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் குழுக்களை கண்டித்தும், மத்திய வளைகுடா பகுதியில் அமைதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரியும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை இன்று முன்வைத்தது.

    இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. எதிராக 58 வாக்குகள் கிடைத்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. போதிய ஆதரவு இல்லாமல் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

    இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே, இஸ்ரேலுக்கு எதிராக இங்கு சுமார் 500 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக ஒரு தீர்மானம்கூட கொண்டு வரப்படவில்லை.


    ஹாமாஸ் இயக்கத்தினரால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீன மக்கள்தான். அவர்களுக்காகவாவது, ஹமாஸ் நடத்திவரும் பேரழிவுகளைப் பற்றி இப்போது பேச இந்த உலகம் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    வாக்கெடுப்புக்கு பின்னர் பேசிய இஸ்ரேல் நாட்டு தூதர் டான்னி டானான், ‘அல் கொய்தா, போக்கோ ஹரம் பயங்கரவாதிகளுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இதேபோல், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது ஏன்? என்பது தொடர்பாக வேறு சில நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் அவையில் விளக்கம் அளித்தனர். #Indiaabstains #GeneralAssemblyresolution #condemnHamas  #Hamas
    Next Story
    ×