search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: பிரான்சில் பொதுமக்கள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு
    X

    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: பிரான்சில் பொதுமக்கள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு

    பிரான்சில் டீசல் விலை உயர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறைக்கு அடிபணிய மாட்டேன் என அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    பாரிஸ்:

    டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் நேற்று  மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    இதேபோல், பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் போராட்டம் வெடித்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


    இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வன்முறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பியுனஸ் அய்ரஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலமாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண அரசு தயாராக உள்ளது. வன்முறையை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

    கடமையாற்றும் அதிகாரிகள் தாக்கப்படுவதையும், பொது சொத்துகள் சேதமாவதையும், தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போவதையும்,பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதையும், யாரும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் எனவும் மேக்ரான் எச்சரித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    Next Story
    ×