search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உக்ரைன் விவகாரம்- ஜி20 மாநாட்டில் புதினை புறக்கணிக்கிறார் டிரம்ப்
    X

    உக்ரைன் விவகாரம்- ஜி20 மாநாட்டில் புதினை புறக்கணிக்கிறார் டிரம்ப்

    உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடல்வழி மோதல் முற்றியுள்ள நிலையில், ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்யலாம் என தெரிகிறது. #Crimea #RussiaSeizesShips #Trump #Putin
    வாஷிங்டன்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து கடல் பிராந்தியத்தில் போர்பதற்றம் உருவாகி உள்ளது. உக்ரைனில் 30 நாட்களுக்கு ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, ஆயுத கட்டுப்பாடு மற்றும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்யலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில், ‘உக்ரைன் கப்பல்களை ரஷ்யா தாக்கி சிறைப்பிடித்தது தொடர்பான முழு அறிக்கைக்காக காத்திருக்கிறேன். அதுபோன்ற அத்துமீறல் எனக்கு பிடிக்கவில்லை. ஜி20 மாநாட்டின்போது எங்கள் (புதினுடன்) சந்திப்பு நடக்காமல் போகலாம்’ என்றார்.

    ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா விரும்புவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது. #Crimea #RussiaSeizesShips #Trump #Putin

    Next Story
    ×